வாணியம்பாடியில் உள்ள நைவாசல் அப்துல் வஹாப் பெண்கள் பூங்கா சுற்றுச்சுவர் உயரத்தை நகராட்சி நிர்வாகம் குறைக்கக்கூடாது என்று வலியுறுத்தி வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா மகளிர் அணியினர் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.
பேட்டி: - 1) ரிஸ்வானா பேகம் 2) ஃபாகிரா அதீக் - வெல்ஃபேர் கட்சி நகர மகளிரணி நிர்வாகிகள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் நைவாசல் அப்துல் வஹாப் பெண்கள் பூங்கா அமைந்துள்ளது.
இந்தியாவிலே பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் பூங்கா ஒன்று இருப்பது என்றால் அது வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள நைவாசல் அப்துல் வஹாப் பெண்கள் பூங்கா மட்டும் தான் இருக்கும்.
இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடி வைத்து இருப்பதால் சமூக விரோதிகளை சுற்றுச்சுவர் சேதப்படுத்தி இரவு நேரங்களில் பூங்காக்குள் அன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை அறிந்த நகராட்சி நிர்வாகம் மீண்டும் பூங்காவை புதுப்பிக்க நகர மன்ற கூட்டத்தில் பூங்கா புறணமைப்புக்காக ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இதன் அடிப்படையில் பூங்கா புரணமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
புறனமைப்பு பணியின் போது பூங்கா சுற்று சுவர் 8 அடியில் இருந்து 4 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.