நபியை இழிவுபடுத்தியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
வாணியம்பாடியில் இறைதூதர் முஹம்மத் நபியை இழிவுபடுத்தி பேசிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாய்ஸ் ஆஃப் வாணியம்பாடி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் வாய்ஸ் ஆஃப் வாணியம்பாடி அமைப்பின் சார்பில் இறைதூதர் முஹம்மத் நபியை
இழிவுபடுத்தி பேசிய மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ராம்கிர் மகராஜ் மற்றும் உத்தபிரதேசத்தை சேர்ந்த நர்சிங் ஆனந்த் ஆகியோரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏ. ஐ. எம். ஐ. எம் கட்சியின் மாநில தலைவர் டி. எஸ். வக்கீல் அஹமத் தலைமை வகித்தார்.

இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், இசுலாமிய அமைப்ப்பனர் மற்றும் ஆண் பெண் இசுலாமியர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இறைதூதர் முஹம்மத் நபியை இழிவுபடுத்தி பேசிய ராம்கிர் மகராஜ் மற்றும் நர்சிங் ஆனந்த் ஆகியோரை கண்டித்தும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி