ராணிப்பேட்டை: மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூட்டுத்தாக்கு தனியார் சிஎம்சி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகளை அவனது பெற்றோர்கள் தானமாக மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளனர். தன் மகன் இறந்து விட்டாலும் அவனுடைய உடல் உறுப்புகள் மூலம் பல உயிர்கள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தானம் செய்த பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.