ராணிப்பேட்டை: பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

59பார்த்தது
ராணிப்பேட்டை: பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
ராணிபேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், அரக்கோணம் அடுத்த குருவராஜ பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு, போக்சோ, குழந்தை திருமணம் தடுப்பு, பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படும் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அப்போது பெண்களுக்கான உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி