ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே சுமைதாங்கி பகுதியில் சன்பீம் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஈஷா அத்விதா (14) நேற்று வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே, பள்ளி நிர்வாகத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாணவியின் தந்தை வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.