ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் சி. எஸ். ஐ. சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் ராஜா, செயலாளர் நரேந்திர குமார், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரும், முன்னாள் ரோட்டரி சங்க தலைவருமான இளங்கோ, முன்னாள் தலைவர் மணி பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சென்னை அகர்வால் மருத்துவமனை குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.