அரக்கோணத்தில் இருந்து நெமிலி செல்லும் சாலையில் சிறுணமல்லி அருகில் கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலம் அமைப்பதற்கு தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தார் சாலையின் மீது வெள்ளம் அதிக அளவில் செல்வதால் நேற்று இரவு திடீரென வருவாய் துறையினர் போக்குவரத்துக்கு தடை விதித்தனர். இதனால் 15 கிராம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.