ராணிப்பேட்டையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று பொங்கல் தின சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் 2025 ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பொங்கல் தின பரிசுகளை வழங்கினார்.