அரக்கோணம் தாலுகா சித்தூர் கிராமத்தில் 9 இருளர் குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் அங்குள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (நவம்பர் 30) இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் முகாமில் தங்கி இருந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்தார். வட்டாட்சியர் ஸ்ரீதேவி உடன் இருந்தார்.