ராணிப்பேட்டையில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல்!
ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், கலவை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் போலீ சார் தலைமையில் குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் ரூ. 25, 000 அபராதமும் விதிக்கப்பட்டது.