குடியாத்தம் - Kudiyatham

அணைக்கட்டு: பேருந்தில் கடத்த முயன்ற 113 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், பள்ளிகொண்டா காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கர்நாடகா அரசு சோகுசுப் பேருந்தை சோதனை செய்தபோது அதில் சென்னை முகவரியை குறிப்பிட்டு பார்சல் போன்று ஐந்து பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 113 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பயணிகளை வேறு ஒரு பேருந்துக்கு மாற்றி விட்டு பேருந்து நடத்துனர் ரவி மற்றும் பேருந்து ஓட்டுனர் சிட்டகவுடா ஆகிய இருவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பின்னர் அனுப்பி வைத்தனர். மேலும் பார்சலில் குறிப்பிட்டிருந்த சென்னை முகவரி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా