குடியாத்தம்: பெயர்ந்து விழுந்த சுகாதார நிலைய மேற்கூரை பூச்சு!

52பார்த்தது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வி. கோட்டா சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இதனிடையே தினந்தோறும் 250 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் காலை மருத்துவமனை செயல்பட தொடங்கின.

அப்போது பிரசவ வார்டில் இருந்த மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நோயாளிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி