ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்த இயக்குனர் கார்த்திகேயன்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் நேரில் சென்று கட்டுமானங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், நகரமன்ற தலைவர் சௌந்தர்ராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் ஆய்வின் போது உடன் இருந்தனர்.