குடியாத்தம்: இரவில் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்ட போலீஸ்!

67பார்த்தது
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் குடியாத்தம் வழியாக சித்தூர் வி. கோட்டா கே. ஜி. எப். குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது.

இதனிடையே தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விழா காலங்கள் முன்னிட்டு குற்றசம்பவங்கள் தடுக்க குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் இன்று இரவு திடீரென வாகன சோதனை மேற்கொண்டனர்

கனரக மற்றும் கார் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனை மேற்கொண்டனர். மேலும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களின் பதிவு எண்களை போலீசார் பதிவு செய்தனர். இந்த திடீர் வாகன சோதனையால் குடியாத்தம் பகுதியில் பரபரப்பான சுழல் காணப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி