உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த மோடி, "உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்திற்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும். இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.