வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே லத்தேரி பகுதிகளில் இரவு நேரங்களில் முதல் காலை 10 மணி வரை அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் லத்தேரி ரயில் நிலையத்தில் ரயில்கள் வருவது கூட தெரியாமல் பொதுமக்கள் அங்கங்கே நின்று செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து ரயில்களும் முகப்பு விளக்குடன் வேகம் குறைவாகவே சென்றன. ரயில் நிலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குடன் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பகல் நேரங்களிலும் பனிப்பொழிவு காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.