வேலூர்: முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன்

62பார்த்தது
வேலூர்: முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன்
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 'முதல்வர் மருந்தகங்களை' காணொலி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் திறந்து வைத்ததை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), வி. அமுலு விஜயன் (குடியாத்தம்), வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி துணைமேயர் சுனில் குமார், மண்டலக்குழுத் தலைவர்கள் புஷ்பலதா வன்னியராஜா, கே. யூசுப்கான், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் இராமதாஸ், வேலூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைபதிவாளர் சந்தானம், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி