திமிரி: குட்கா விற்ற 4 கடைகளுக்கு சீல்
திமிரி, சோளிங்கர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர், போலீசார் தலைமையில் குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரின் கடைகளுக்கு சீல் செய்தனர். ஒவ்வொரு கடைக்கும் ரூ. 25, 000 அபராதம் விதிக்கப்பட்டது.