ஆற்காடு - Arcot

திமிரி அருகே லாரி மோதி முதியவர் பலி

திமிரி அருகே லாரி மோதி முதியவர் பலி

திமிரி அடுத்த மோசூர் கிராமம் ஆரணி நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக திமிரி போலீசாருக்கு அவ்வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர் வேலூர் சத்துவாச்சாரி, பக்தவச்சலம் நகரை சேர்ந்த குப்புசாமி மகன் சக்திவேல் (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் நேற்று ஆற்காட்டில் இருந்து ஆரணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஆரணியில் இருந்து விதை நெல் ஏற்றி வந்த லாரி, சக்திவேல் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా