ராணிப்பேட்டை பழைய பாலாறு மேம்பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்கள் நுழைவதை தடுக்க தடுப்பு கம்பம் அமைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை பழைய பாலாறு மேம்பாலத்தின் மீது சரக்கு வேன் ஒன்று செல்ல முயன்றது. அப்போது தடுப்பு கம்பத்தின் மீது மோதியது. இதில் தடுப்பு கம்பம் சரக்கு வேன் மீது விழுந்தது. இதில் வேனின் மேற்பகுதி சேதமடைந்து ஓட்டுனர் லேசான காயங்களுடன் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடுப்பு கம்பத்தை சீரமைத்து, வேனை அப்புறப்படுத்தினர். உடனடியாக, போக்குவரத்து மாற் றம் செய்யப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு தவிர்க்கப்பட்டது.