கோடை விடுமுறை, தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குறிப்பிட்ட வார இறுதி நாட்களில் மங்களூர் சந்திப்பு, திருவனந்தபுரம் வடக்கு, கொல்லம் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படும்.
06113 சென்னை சென்ட்ரல் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 12, 19 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு 11:20 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3:30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.