ஆற்காடு: குடியிருப்புக்குள் ஓடி வந்த மான்

69பார்த்தது
ஆற்காடு தேவி நகர் பகுதியில் இன்று மூன்று வயது பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் ஓடி வந்தது. அப்போது திடீரென வாஷிங் மெஷின் சர்வீஸ் சென்டருக்குள் புள்ளிமான் ஓடியதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். இதுகுறித்து ஆற்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் புள்ளிமானை பாதுகாப்பாக மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

தொடர்புடைய செய்தி