பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் இன்று (ஏப்., 10) முதல் 4 நாட்களுக்கு தங்கத் தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். நாளை பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ள நிலையில், ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் தங்கத் தேர் புறப்பாடு இன்று முதல் நடைபெறாது.