ஆற்காடு - Arcot

ஆற்காடு: தகன மேடையை நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு

ஆற்காடு: தகன மேடையை நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு

ஆற்காடு நகராட்சி பாலாற்றங்கரையில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1 கோடி 42 லட்சம் மதிப்பீட்டில் இலவச எரிவாயு தகனமேடை கட்டப்பட்டு, ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை நகராட்சி மண்டல இயக்குனர் சா. லட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது எரிவாயு தகன மேடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், பூங்கா பராமரிப்பு, கட்டணம் இன்றி இலவசமாக உடல் தகனம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின்னர் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் மற்றும் அதிகாரிகள், மகாத்மா அறக்கட்டளைக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த இலவச எரிவாயு தகனமேடைக்கு ஐ.எஸ்.ஓ. தர சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் அவர் பார்வையாளர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా