
இந்தியாவில் கிளர்ச்சி ஏற்படும்; ஆற்காடு பஞ்சாங்கத்தில் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தோப்புக்கான கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பெருவிழா நிறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது. புது வருடத்தில் விவசாயம் செழிக்கும், கால்நடைகள் உற்பத்தி அதிகரிக்கும், குழந்தைகளுக்கு வியாதிகள் ஏற்படும், நல்ல மழை பெய்யும், விலைவாசி உயர்வால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.