உடன்பிறப்புகள் தினம் ஆண்டுதோறும் ஏப். 10 கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மான்ஹட்டனை சேர்ந்த கிளவுடா எவார்ட் என்பவர் தனது உடன்பிறப்புகளான அலன் மற்றும் லிசெட்டே ஆகியோரை வெவ்வேறு விபத்துகளில் இழந்துவிட்டார். அவர்கள் மீது அதீத பாசம் வைத்திருந்த கிளவுடா, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நாளை நிறுவினார். பிறப்பு முதல் இறப்பு வரை உடனிருக்கும் முக்கிய உறவான உடன்பிறப்புகளை கொண்டாடுவோம்.