நெமிலி: குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
நெமிலி அடுத்த சயனபுரம் சாலையை சேர்ந்த வன்னிய ராஜா என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்தார். இது தொடர்பாக நெமிலி போலீசார் அவரை கைது செய்த நிலையில் இன்று(அக்.26) ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.