திருச்சி லால்குடி அருகே உள்ள மணக்கால் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீநங்கையார் அம்மன் கோயில். இந்த கோயில் 800 ஆண்டுகள் பழமையானது என ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த அம்மனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் இருந்த குழப்பமும், தம்பதிகளுக்கு இடையே இருந்த பிரிவும் நீங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஸ்தல மரமான நருவுளி மரத்தை சுற்றி வந்து இலைகளை பிரசாதமாக சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.