வேலூர்: 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
வேலூர் மாவட்டம் கத்தேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கே வி குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் வட்டாட்சியர் சந்தோஷ் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயா முருகேசன் மற்றும் பலருடன் இருந்தனர்.