"நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு உள்ளது எனவும், தனது தந்தை ஆசியும் அவருக்கு உண்டு எனவும் நடிகர் பிரபு கூறியுள்ளார். மேலும், ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன். விஜய் இவ்வளவு தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் உள்ளது. விஜய் நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது" என பேசியுள்ளார்.