வேலூர்: 798 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வன் திட்ட முகாமில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 798 பயனாளிகளுக்கு ரூ.10.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வருவாய் அலுவலர் ஒன்றிய கவுன்சிலர்கள், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சூனில் குமார், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.