அணைக்கட்டு - Anaicut

அணைக்கட்டு: பாம்பு கடித்து மாணவி பலி

அணைக்கட்டு: பாம்பு கடித்து மாணவி பலி

அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த எடைத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செல்வி. இவர்களின் இளைய மகள் ஷாலினி (வயது 17) தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.  இந்த நிலையில் ஷாலினி துணி துவைத்துவிட்டு வீட்டின் அருகே உள்ள இடத்தில் காய வைக்க சென்றுள்ளார். அப்போது அங்கு செடியில் மறைந்திருந்த விஷப்பாம்பு ஒன்று மாணவியின் காலில் கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த ஷாலினி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்கள் மராட்டியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, வரும் வழியிலேயே ஷாலினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சமீப காலமாக ஒடுகத்தூர், அணைக்கட்டு சுற்றுப்பகுதிகளில் பாம்பு கடித்து பல பேர் உயிரிழந்துள்ளனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా