வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஊராட்சி சென்னாங்குப்பம் கிராமத்தில் வேளாண்மை துறையின் மானாவாரி மேம்பாட்டு பகுதி ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் ரூபாய் 30,000 மானியத்தில் வேளாண்மை இடுப்பொருட்கள், கரவை மாடு, தேன் பெட்டி, மண்புழு உரப்படுக்கை மற்றும் விதைகள் பெற்று பயனடைந்த பயனாளிகளிடம் திட்டத்தின் பயன்கள் குறித்து நேரடியாக ஆட்சியர் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின்போது ஆட்சிய உதவியாளர் தேன்மொழி வட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.