வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம், காசிமேடு, கடலூர் அண்டை மாநிலங்களான கேரளா, மங்களுர் போன்ற இடங்களில் இருந்து மீன் இறக்குமதி செய்யபடுகிறது. இங்கு வார இறுதி நாட்களில் 70 டன் வரை விற்பனை நடைபெறுகிறது.
இந்நிலையில், புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையாற இன்று வேலூர் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் கூட்டம் காலை முதலே அலைமோதியது. மீன் மற்றும் இன்றி பல்வேறு இறைச்சிகளையும் மக்கள் வாங்கிசென்றனர்.
கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீன்களின் விலை சற்றே உயர்ந்து காணப்பட்டாலும் மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.