ரயிலின் இன்ஜின் கழன்றதால் பரபரப்பு!

79பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் அருகே திப்ருகாரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் முகுந்த ராயபுரம் திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

என்ஜினையும், இதரபெட்டிகளையும் இணைக்கும் ராடு உடைந்ததால், ரயில் சுமார் 1 மணிநேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த வழியாக செல்லும் ரயில்களும் ஆங்காங்கே வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பின்னர், மாற்றி எஞ்சின் வரவழைக்கப்பட்டு ரயில் பெட்டிகளை இணைத்து ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி