வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புகார் பதிவேடுகளை பார்வையிட்ட அவர், தெருவில் மழை நீர் தேங்குவதாக புகார் அளித்திருந்த கணேசன் என்பவரை தனது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என பரிசோதித்தார். அப்போது புகார் அளித்த கணேசன் கூறுகையில், "அலுவலர்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார்".
இந்த திடீர் ஆய்வின் போது வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.