வேலூர் சிறைத்துறை டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் பணியிடை நீக்கம்
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார் (30) சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில் வேலூர் மத்திய சிறை ஜெயிலர் அருள்குமரனை சிறைத்துறை டிஜிபி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும் அப்போது அவர் திருட்டில் ஈடுபட்டதாக சிறையில் வைத்து சித்தரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வேலூர் சிறைத்துறை டிஐஜி காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.