காட்பாடியில் குட்கா விற்ற 2 பேர் கைது

80பார்த்தது
காட்பாடியில் குட்கா விற்ற 2 பேர் கைது
காட்பாடி வடுகன்குட்டை முஸ்லிம் காலனி பகுதியில் ஒருவர் குட்கா விற்பதாக காட்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள அக்பர்பாஷா (வயது 45) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அவர் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் குட்கா பொருட்கள் எங்கிருந்து கிடைத்தது, யார் விற்பனை செய்தார்கள் என விசாரணை நடத்தினர். அதில், வேலூர் பாபுராவ் தெரு பகுதியைச் சேர்ந்த லக்னாராம் சவுத்ரி (30) என்பவரிடம் குட்கா வாங்கி விற்பனை செய்து வந்ததாக அக்பர்பாஷா தெரிவித்தார். இதனையடுத்து குட்காவை விற்பனை செய்த லக்னாராம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லக்னாராம் சவுத்ரியிடம் விசாரணை செய்ததில் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வேலூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி