ஹர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி
ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியா ஜெட்டா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் வீரராக ஹர்ஷ்தீப் சிங் ஏலம் விடப்பட்டார். ஆரம்ப விலையாக அவருக்கு ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. சென்னை, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், பெங்களூரு, ஐதராபாத், பஞ்சாப் என பல அணிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டன. இறுதியில் 18 கோடிக்கு ஹர்ஷ்தீப் சிங்கை தக்கவைத்துக் கொண்டது பஞ்சாப் அணி.