ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 பயணிகள் மட்டுமே இருந்த பேருந்தில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனைக் கண்ட நடத்துநர் போலீசில் புகார் அளித்தார். இறந்தவர் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.