NATO நாடுகள் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்!
உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள NATO கூட்டமைப்பு நாடுகளின் ஏவுகணைகள் ரஷ்யாவை தாக்கினால் அது NATO அமைப்பு நடத்திய தாக்குதலாகவே கருதப்படும். பதிலுக்கு, ரஷ்யா தனது அணு ஆயுதங்களை உக்ரைன் மற்றும் NATO நாடுகள் மீது பயன்படுத்தும்; இது தொடர்ந்து 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய முன்னாள் அதிபரும் அந்நாட்டுப் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான திமீத்ரி மெத்வேதெவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.