சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தர்காவில் நோய் குணமாக மந்திரிப்பது தொடர்பாக இரண்டு பேர் மோதி கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சிலர் இங்கு வந்து மந்திரித்து கொள்வது வழக்கம். சாயிதீன் மற்றும் பாட்சா ஆகியோர் மந்திரித்து வந்த நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரும்பு கரண்டியால் தாக்கி கொண்டனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.