திண்டிவனத்தை சேர்ந்த ராஜசேகர் (28) பொறியியல் பட்டதாரியாவார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றிய இவர் பின்னர் சொந்த ஊருக்கு திரும்பினார். திருமணம் தள்ளிப்போனதால் ராஜசேகர் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் அவர் நேற்று (நவ. 06) தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.