செங்கம் - Chengam

செங்கம்: பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு விழா; எம்எல்ஏ பங்கேற்பு

செங்கம்: பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு விழா; எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியம், இராயண்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட விஜியப்பனூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தினை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  ஊராட்சி மன்ற தலைவர் திவ்யபாரதி ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் கோ. இரமேஷ், மு. ஒன்றிய செயலாளர் சி. ஜெயராமன், ஒன்றிய துணை செயலாளர் கல்பனா ஜோதி, மாவட்ட பிரதிநிதிகள் எஸ். ஜோதி, வெங்கடேசன், புகழேந்தி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் எஸ். சுரேஷ், எஸ். சதீஷ்குமார், ஆர். சங்கமித்திரை, கிளை கழக செயலாளர்கள் வேலாயுதம், மொட்டையன், குபேந்திரன், முருகானந்தம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் இரவீந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
போளூா்: ஆபத்தை உணராமல் ரயில்வே பாதையை கடக்கும் வாகன ஓட்டிகள்
Jan 05, 2025, 17:01 IST/போளூர்
போளூர்

போளூா்: ஆபத்தை உணராமல் ரயில்வே பாதையை கடக்கும் வாகன ஓட்டிகள்

Jan 05, 2025, 17:01 IST
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே போளூர்-பெலாசூர் செல்லும் சாலையில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. பெலாசூர் சாலையில் சனிக்கிழமை, பெலாசூர், பாடகம், அலங்காரமங்கலம் என பல்வேறு கிராமங்களுக்கு இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தினமும் செல்கின்றனர்.  மேலும் போளூர்-வேலூர், போளூர்-சேத்துப்பட்டு சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள் போளூர்-பெலாசூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்தச் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்த நிலையில் மன்னார்குடி- திருப்பதி, கன்னியாகுமரி-புருலியா, சென்னை-திருவண்ணாமலை என பல்வேறு வழித்தட ரயில்கள் செல்லும் போது, ரயில்வே கடவுப்பாதை 5 நிமிஷத்துக்கு முன்பு மூடப்படுகிறது.  அந்த நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை தண்டவாளத்தில் ஓட்டி கடந்து செல்கின்றனர். திடீரென ரயில் வந்தால் விபத்து ஏற்படலாம். எனவே, ரயில்வே துறை சார்பில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.