செங்கம் - Chengam

திருவண்ணாமலை: புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்

திருவண்ணாமலை மாவட்டக் கிளை செஞ்சிலுவைச் சங்கத்தின் (ரெட்கிராஸ்) சார்பில் செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர், இராயண்டபுரம், எடத்தனூர், திருவடத்தனூர் ஆகிய கிராமங்களில் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.  இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் கோ. இரமேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சி. ஜெயராமன், ஒன்றிய துணை செயலாளர் சி. பன்னீர்செல்வம், நகர செயலாளர் அ. சுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், வட்டாட்சியர் மோகனராமன், BDO இரவீந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் என பலர் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை