அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ பூஜை

57பார்த்தது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சந்தனம், பால், பழம், பன்னீா் உள்பட பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு மாலை 4. 30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி