திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அவர்களின் தலைமையில் திருவண்ணாமலையில் உள்ள சட்டமாமேதை அம்பேத்கர் உருவச்சிலையினை கழுவியும், பின்னர் கண்டன முழக்கம் எழுப்பியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, மாநில பொறியாளரணி செயலாளர் எஸ்.கே.பி. கருணாநிதி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன், திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி