திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்- போளூர் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி சி. மனோகரன் தலைமையில் தொகுதியில் உள்ள ஜவ்வாது மலை தெற்கு, செங்கம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேரணியாக சென்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவு தினத்தை அனுசரித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.