செங்கம் - Chengam

திருவண்ணாமலை: வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்.. எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை: வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்.. எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, வீரணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் சிறப்பு முகாமில் நடைபெற்று வரும் பணிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் இரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் வேலு, மாவட்ட பிரதிநிதி ஜோதி, கிளை கழக செயலாளர் ஆறுமுகம், வார்டு உறுப்பினர் மதன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
Nov 16, 2024, 17:11 IST/திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

Nov 16, 2024, 17:11 IST
ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை (நவ. 16) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனா். திருவண்ணாமலையில் வியாழக்கிழமை மாலை முதலே ஏராளமான ஆந்திர மாநில மற்றும் வெளியூா் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை வரை விடிய, விடிய பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். தொடா்ந்து இடைவிடாமல் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை மாலை வரை கிரிவலம் வந்தபடியே இருந்தனா். அவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குப் பிறகு அதிகரிக்கத் தொடங்கியது.  குறிப்பாக, இரவு 8 மணி முதல் பல லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்தனா். திருவண்ணாமலை, அடி அண்ணாமலை, வேங்கிக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதலே லேசான தூறல் மழை பெய்தபடியே இருந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். தொடா்ந்து, சனிக்கிழமை (நவ. 16) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.