
ஆரணி: கூட்டுறவு நியாயவிலைக் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ
ஆரணி நகரம், சைதாப்பேட்டை பகுதியில் 16-வது வாா்டில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடை தொலைவாக இருப்பதாகவும், எனவே இரண்டாக பிரிக்க ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரனிடம் நகா்மன்ற உறுப்பினா் நடராஜன் தலைமையில் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா். அதன்பேரில் 800 குடும்ப அட்டைகளை பிரித்து புதிய கூட்டுறவு நியாயவிலைக் கடையை வாடகை கட்டடத்தில் எம்எல்ஏ எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிா்வாகி சேவூா் எஸ். ஆா். விஜயகுமாா், ஆரணி நகர செயலாளா் ஏ. அசோக்குமாா், அவைத் தலைவா் எஸ். ஜோதிலிங்கம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ. நடராஜன், ஏ. ஜி. ஆா். மோகன், எஸ். கே. பாக்கியலட்சுமி வெங்கடேசன், கே. குமரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.